Visitors point out that they like the menu of Indian and Sri Lankan cuisines at this restaurant. Have a nice time here and share tasty seafood with your friends.
SundaySun | 12PM-11PM |
MondayMon | 12PM-11PM |
TuesdayTue | 12PM-11PM |
WednesdayWed | 12PM-11PM |
ThursdayThu | 12PM-11PM |
FridayFri | 12PM-11PM |
SaturdaySat | 12PM-11PM |
வாடிக்கையாளரை எதிர்கொள்வதில், அணுகுவதில் தங்களது பண்பு நலனுக்கு முதலில் தலைவணங்குகிறோம். வரவேற்கிறோம்.
எங்களது மழலை ப.கௌ.கவியின் 02.02.2022 (புதன்) 5வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இரவு உணவு வழங்க ஒப்புக் கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.
மகிழ்ச்சியின் வளர்நிலையாக நட்பின் அடையாளமாக நேரடியாக, சுவையாக, நிறைவாக அளித்துச் சிறப்பித்ததில் நெகிழ்ச்சி அடைந்தோம்.
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பினை நாங்கள் சிறப்பாகப் பின்பற்றியதற்குத் தங்களின் தொழில் நேர்த்தியே முதன்மையான காரணம்.
மேலும், தங்களின் ஆர்வம், ஈடுபாடு, விருப்பம், நேரம் தவறாமை, அறுசுவை உணர்வு, கேட்ட நொடியில் கூடுதல் உணவளிப்பு, கனிவான உபசரிப்பு, இறுதியில், தங்களது வழக்கமான உணவு வழங்கும் நேரம் முடிந்தாலும் எங்களது பசிக்கும் உணவு அளிக்க முன் வந்தது என இன்னும் பிற தனித்த பண்புகள் ஆகியவற்றால் நெகிழ்ச்சி அடைகிறோம் என்பதுதான் நிதர்சனம்.
எங்களது உளம் கனிந்த நன்றிகள் பல தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.
தங்களது ஆளுமை பண்பில், நாங்கள் கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டிய பண்புகள் உள்ளதை கவனிக்க, எடுத்துக் கொள்ள தவறவில்லை.
நன்றி அன்பு வணக்கம்.
நன்றியுடன்,
முனைவர் பலராமன் சுப்புராஜ்,
சீ.கௌதமி,
மழலை ப.கௌ.கவி.